Skip to content
Home » பூஜையுடன் துவங்கிய “SK21″… சிவகார்த்திக்கேயன் படத்தை துவக்கி வைத்த கமல்….

பூஜையுடன் துவங்கிய “SK21″… சிவகார்த்திக்கேயன் படத்தை துவக்கி வைத்த கமல்….

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  தென்னிந்தியாவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தையடுத்து ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

SK21

இந்நிலையில் இப்படத்தின் தொடங்கவிழா பூஜையுடன் தொடங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை உலகநாயகன் கமலஹாசன் தொடங்கி வைத்தார். இது குறித்து வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் முதல் ஷாட்டை கமல் தொடங்கி வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

SK21

சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

பிரபல நடிகர் படத்தில் சாய்பல்லவி இணைவதில் சிக்கல்? | nakkheeran

இந்த படத்தில் நடிகர் சிவகாரத்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ராணுவ கதைக்களம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வட இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான சில பயிற்சிகளையும் சிவகார்த்திகேயன் மேற்கொண்டு வந்தார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!