e-KYC பூர்த்தி செய்ய நாகாலாந்து மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அம்மாநில அமைச்சர் டெம்ஜென் இம்னா வீடியோவாக பகிர்ந்துள்ளார். சிறிய கண்கள் காரணமாக ஸ்கேன் செய்ய முடியாமல் படாதபாடு படுகின்றனர். இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் அவர்கள் படும் அவதி விவரிக்கமுடியாதது. எனவே, அப்பகுதி மக்களின் உடல் பண்புகளுக்கு ஏற்றவாறு பயோமெட்ரிக் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
