கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி (44). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கோவை காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரின்டிங் நிறுவனத்திற்குள் மூன்று அடி பாம்பு புகுந்ததாக தெரிகிறது. அதனை மீட்க முரளி இரவு சென்று
பாம்பை பத்திரமாக மீட்டார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு முரளியின் காலில் கடித்துள்ளது.
இதில் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் புகுந்த பாம்பை மீட்கச் சென்ற வீரர் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.