Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலமன் பாப்பையா உடல் தகனம்.. விடைபெற்றார்

சாலமன் பாப்பையா உடல் தகனம்.. விடைபெற்றார்

மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா (90) உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது விருப்பப்படி தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறையினர் கௌரவ மரியாதை செலுத்திய நிலையில், குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்த நிலையில், பாப்பையா எழுதி வைத்த உயிலில் குறிப்பிட்டுள்ளபடி, உடல் தகனம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து பாப்பையாவுக்கு கண்ணீருடன் விடைகொடுத்தனர்.

error: Content is protected !!