Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவி-குழந்தைகளை அனுப்ப மறுத்த மாமனாரை கொன்ற மருமகன்

மனைவி-குழந்தைகளை அனுப்ப மறுத்த மாமனாரை கொன்ற மருமகன்

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் வசித்து வந்த முனியசாமியின் மகளுக்கும், மருமகன் முருகனுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாகக் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மனைவி தனது குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து தந்தை முனியசாமியின் வீட்டில் வசித்து வந்தார். மனைவியையும் குழந்தைகளையும் மீண்டும் தனது வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு முருகன் வலியுறுத்திய போதும், மாமனார் முனியசாமி அதற்குச் சம்மதிக்காமல் தடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மனைவி மற்றும் குழந்தைகளைத் தன்னுடன் அனுப்ப மறுத்ததால் ஆத்திரமடைந்த மருமகன் முருகன், தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து நள்ளிரவில் முத்தையாபுரத்தில் உள்ள மாமனார் முனியசாமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமனார் முனியசாமியை, முருகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த முனியசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மாமனாரைக் கொலை செய்துவிட்டு மருமகன் முருகன் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான முருகன் உள்ளிட்ட 3 பேரையும் பிடிக்கக் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!