Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பெரிய கோவிலில் 12வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் 12வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாதம் இரண்டு பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல் ஆவணி மாதத்தின் பிரதோஷமான இன்று பெருவுடையார்க்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!