கேரளாவில் ஓணம் பண்டிகை காலத்தின் முதல் 8 நாட்களில் மாநில அரசின் ‘பெவ்கோ’ மதுபான விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.771.29 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.694.96 கோடிக்கு மது விற்பனையான நிலையில், திருவோணத்திற்கு முந்தைய ‘உத்ராடம்’ நாளன்று மட்டும் ரூ.126.31 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு முழு ஓணம் பண்டிகை காலத்தில் ரூ.826.38 கோடி வசூலான நிலையில், இந்த ஆண்டு அந்த சாதனையை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
