நேபாளம் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மக்கள மாயமானவர்கள் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்தனை செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஆன்மீகப் பயணமாக நேபாளத்திற்கு 57 பேர்

சென்ற நிலையில் அதில் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்,
மீதம் உள்ள 37 பேர் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.
இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி 300 இந்தியர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது,
இந்நிலையில நேபாளம் பெரு வெள்ளத்தில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்
தஞ்சையில் பொதுமக்கள் பேரணியாக வந்து ரயில் நிலையம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்,
மாயமான தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரிகளை பாதுகாப்பாக உடனடியாக மீட்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
