கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே முத்துசாமி என்பவர் விவசாயம் செய்து வருவதுடன், ஆடு வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு ஆடுகளை ஆட்டுப்பட்டியில் அடைத்து வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இன்று காலை ஆட்டுப்பட்டிக்கு வந்து பார்த்தபோது, அங்கு இருந்த ஆடுகளில் வெறிநாய்கள் கடித்ததில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து கால்நடைத்துறை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ

இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர், நாய் கடியால் பாதிக்கப்பட்டு உயிருடன் இருந்த மற்ற ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உயிரிழந்த ஆடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் 1 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், ஆட்டுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் வெறிநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
