தமிழகத்தில் இன்று ஒரேநாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை குறைந்து விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,17,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.14,725க்கும் விற்கப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்தும் மாலையில் ரூ.1,720 குறைந்து சவரன் ரூ.1,17,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
