Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரியநாயகி அம்மனுக்கு 2500 வெற்றிலைகள்-சிறப்பு அலங்காரம்

2500 வெற்றிலை, 1000 பாக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரியநாயகி அம்மன்: திரளானோர் ஆர்வமுடன் சாமி தரிசனம் செய்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஆடி மாதம் என்றாலே அம்மன் ஆலயங்களில் விழாக்கள் களைகட்டும். தரிசிக்க வருகை தரும் பக்தர்களுக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து அருள் பாலிப்பார்.

அந்த வகையில் அரியலூர் நகரின் மேலத்தெருவிலுள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன்

ஆலயத்தில், ஆடி இரண்டாவது வெள்ளியான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு, 2500 வெற்றிலைகள் மற்றும் 1000 பாக்குகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பெரியநாயகி அம்மன் மற்றும் அம்மன் வீற்றிருக்கும் பீடம் ஆகியவற்றில் வெற்றிலைகளை நேர்த்தியாக கோர்த்து, பாக்குகளைக் கொண்டு தோரணம் அமைந்திருந்தது காண்போரை

கவர்ந்திழுந்தது.

இதனை திரளான பக்தர்களும், பொதுமக்களும் கண்டு பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தன.

error: Content is protected !!