செங்கல்பட்டு அருகே பழவேலி என்ற இடத்தில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை தாண்டி எதிர்திசையில் வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கால் சிதைந்து படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தின் காட்சிகள் பின்னால் வந்த வாகனத்தின் டேஷ் போர்டு கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
