Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி…. இடம் தேர்வு செய்கிறார் அமைச்சர் உதயநிதி

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  திருச்சி விமான நிலையத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

கேள்வி: விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் உங்களது பணி எப்படி இருக்கிறது?

பதில்: விளையாட்டு துறைக்கு முதல்வரிடம் பல கோரிக்கை வைக்க உள்ளோம்.

25 கோடி செலவில் தமிழகத்தில் முதல் முறையாக முதலமைச்சர் கோப்பை போட்டி பல்வேறு மாவட்டத்தில் நடத்தி

உள்ளோம் – விரைவில் இறுதி போட்டி நடத்தி சென்னையில் முதலமைச்சர் கையால் விளையாட்டு விரர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளோம்.

கேள்வி: தஞ்சை செங்கிப்பட்டி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி எப்போது கொண்டு வருவீர்கள்?

பதில்:  அந்த இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்யத்தான் வந்திருக்கிறேன். விரைவில் அதுபற்றிய  விபரங்களை கூறிகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் செங்கிப்பட்டி புறப்பட்டு சென்றார்.  பேட்டியின்போது அமைச்சர்கள் கே.என். நேரு,  மகேஷ் , மேயர்கள் அன்பழகன்(திருச்சி, சண் ராமநாதன்(தஞ்சை), எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், திருவையாறு  துரை.சந்திரசேகரன் மற்றும்  திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!