Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்று ஸ்ரீரங்கம் தைத்தேர்…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது – ஸ்ரீராமர் பிறந்த புனர்பூச நட்சத்திரத்தில் இந்த தேரோட்டம் வருடம் தோறும் தை மாதத்தில் நடைபெறுவது மிகவும் விஷேசமானது. தினசரி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார் விழாவின் முக்கிய நிகழ்வான தைத்த தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதற்க்காக அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தை தேர் மண்டபம் வந்தடைந்தார், பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரில் எழுந்தருளிய நம்பெருமாளை பெரும் திரளான பக்தர்கள் ரங்கா ரங்கா கோவிந்தா கோஷமிட்டவாரு தேரை வடம் பிடித்து இழுத்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!