Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பசுபதிகோவில் புனித அந்தோணியார் ஆலயத்தின் 131-ம் ஆண்டு தேர்பவனி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதி கோயில் அண்ணா சிலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 131ஆ-ம் ஆண்டு ஆடம்பர தேர்பவனி திருவிழா நடைபெற்றது.

விழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி விழா விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி,

பங்குதந்தை, உதவி பங்கு தந்தை முன்னிலையில், சிறப்பு கூட்டுப்பாடல், திருப்பலி ஆகியவை நடந்தது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளாலும், மலர்களாலும் அந்தோணியார் சொரூபம்

வைக்கப்பட்ட ஆடம்பர தேர் புனிதம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில், பசுபதிகோயில் புனித அந்தோணியார் ஆலயத்தின் அருள் தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், இறைமக்கள் மற்றும் புனித அந்தோணியார் கோவில் தெருவாசிகள் செய்திருந்தனர்.

error: Content is protected !!