Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காகிதம் விலை உயர்வை கண்டித்து அக்.,9,10ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்

காகிதம் விலை உயர்வை கண்டித்து அக்.,9,10ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்

காகிதம் விலை உயர்வை கண்டித்து, வரும் அக்டோபர் 9, 10 ஆகிய, 2 நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது என தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோவை மண்டல தலைவர் தண்டபாணி பேட்டி.

கரூரில் தனியார் ஹோட்டலில் தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது;

அட்டைப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்கள் ஆன காகிதத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், ஒரு டன்னுக்கு, 1,000 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

தவிர அட்டைப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மற்ற மூலப்-பொருட்களின் விலையும், 8 முறை உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர்களின் சம்பளம், மின்கட்டணம் உள்ளிட்ட உற்பத்தி செலவுகளும் உயர்ந்துள்ளது. இதையொட்டி, திருப்பூரில் நடந்த தென்மண்டல சங்க கூட்டத்தில், அட்டைப்பெட்டிகளின் விலையை தற்போதைய விலையில் இருந்து, 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அட்டைப்பெட்டிகளுக்கு டெலிவரி கட்டணம் தனியாக வசூலிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் தொடர் விலை உயர்வை கருத்தில் கொண்டு, அதை பொதுமக்கள் மற்றும் உபயோகிப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வரும் அக்டோபர் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள், அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி, தயாரிக்கப்பட்டுள்ள அட்டை பெட்டிகளையும் விற்பனை செய்வது நிறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்கள் கரூர் ,கோவை நாமக்கல், சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 400 மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்காது என தெரிவித்துள்ளனர். இதனால் டெக்ஸ்டைல், பட்டாசு தொழில் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!