ஜார்கண்ட் அரசு தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 21-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியுடன் பேரணி செல்ல மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒருபகுதியாக 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஜார்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திக்காரி மோர்ச்சா தலைவர் தேவேந்திரநாத் மகதோ மற்றும் 4 மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
