திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஒரு மாத காலமாக சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி 13-ம் தேதியும் நடைபெற்றது. இதில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் மற்றும் பல்வேறு சடங்குகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் ஹோமத்தில் பங்கேற்க ஒருநாளுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டில் இருவர் பங்கேற்கலாம். பங்கேற்பவர்கள் பாரம்பரிய உடை அணிவது கட்டாயமாகும்.
திருப்பதி கோயிலில் சுப்பிரமணிய சுவாமி ஹோமம்
