Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்.. ரூ.5.13 கோடி அபராதம்

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்.. ரூ.5.13 கோடி அபராதம்

இந்திய ரயில்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரம், பேன்ட்ரி (Pantry) பெட்டிகளில் நிலவும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவை தொடர்பான புகார்களின் அடிப்படையில், கடந்த 3 ஆண்டுகளில் உணவு விநியோக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அளித்துள்ள பதிலில், இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் சராசரியாக 58 கோடி உணவுகள் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். இதில் தரமற்ற உணவு மற்றும் சமையலறை சுகாதாரம் தொடர்பான புகார்கள் 0.0008% என்ற மிகக் குறைந்த அளவிலேயே பதிவாகின்றன எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், கடந்த 3 ஆண்டுகளில் வரப்பெற்ற புகார்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தவறிழைத்த உணவு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், சமையலறைகளில் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் ரசீது முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

error: Content is protected !!