வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ், அர்ஜுன் தாஸ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘கலிபா’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆக.20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தங்க கடத்தலை பின்னணியாக கொண்ட இந்த திரைப்படம், உலகளவில் முதல் வாரத்திலேயே ரூ.40 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்து வரும் பேராதரவை கொண்டாடும் விதமாக படக்குழு தற்போது சிறப்பு ‘சக்சஸ் டீசரை’ வெளியிட்டுள்ளது.
