தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் முதலாவது அலகில் மேற்கொள்ளப்பட்டு வந்த 660 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மின் நிலையத்தில், சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் மீண்டும் உற்பத்தி தொடங்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, உடன்குடி மின் நிலையத்தின் 2-வது அலகில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டங்கள் மற்றும் கூலிங் டவர் சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
திடீரென நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி… உடன்குடியில் பரபரப்பு!
