பழனி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி (முருகன்) கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களின் கட்டணம் திடீரென இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடிக் கட்டண உயர்வு வெளியூர்களில் இருந்து வரும் சாமி தரிசனப் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த உயர்வை அறநிலையத்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனப் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
