Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து… தொழிலாளர்கள் உயிர்தப்பினர்

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து... தொழிலாளர்கள் உயிர்தப்பினர்

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கருப்பம்பாளையம் பிரிவு அருகே தனியார் டெக்ஸ்டைல் நிறுவன பேருந்து, முன்னால் சென்ற அரிசி மண்டி டாட்டா ஏசி சரக்கு வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த தொழிலாளர்கள் மற்றும் டாட்டா ஏசி வாகன ஓட்டுநர் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கி, அவற்றின் சிதறல்கள் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பரவி கிடந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவல்துறையினர், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், சாலையில் சிதறிக் கிடந்த கண்ணாடி துண்டுகளை போக்குவரத்து காவலர் ஒருவர் துடைப்பம் கொண்டு அகற்றி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்தார். காவலரின் இந்த பொறுப்புணர்வான செயல் அப்பகுதி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.

error: Content is protected !!