சென்னை: பராசக்தி படத்தை இயக்கிய சுதா கொங்கரா தொடர்ந்த வழக்கில் 8.39 கோடி ரூபாயை உத்தரவாதமாக டெபாசிட் செய்ய வேண்டுமென்று படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பரசாக்தி திரைப்படம் கடந்த ஜனவரியில் வெளியானது.
படத்தை இயக்க சுதா கொங்கராவிற்கு 15 கோடி ரூபாய் ஊதியம் ஒப்பந்தம் செய்த நிலையில் 8.39 கோடி ரூபாய் ஊதிய பாக்கி வைத்துள்ளதாகவும் அந்த தொகையை பிப்ரவரி 8ம் தேதியிலிருந்து 8 சதவீத வட்டியுடன் செலுத்துமாறு கோரி சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, டான் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நான்கு வாரங்களுக்குள் 8.39 கோடி ரூபாய் மதிப்புக்கு உத்தரவாதம் செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டார்.
அவ்வாறு செலுத்தத் தவறினால் அந்த நிறுவனத்தின் எதிர்கால படங்களின் வருவாயும் இணைக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிபிட்டுள்ளார்.
