Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி-பெங்களூருக்கு கோடைகால சிறப்பு ரயில்

திருச்சி, ஏப் 1 திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ஏப்ரல்7 ந் தேதி முதல் 28ந்தேதி வரை (4 நாட்கள்) செவ்வாய்க்கி ழமைகளில் மட்டும் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.

திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்திலி ருந்து ஏப்ரல் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய நாள்களில் காலை 5.30 மணிக்கு புறப் படும் திருச்சி எஸ்எம் விடி பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 06007) அன்று பிற்பகல் 1.30 மணிக்கு எம்எம்விடி பெங்க
ளூரு ரெயில் நிலையத்தை சென்றடை கிறது.மறுமார்க்கத்தில் ஏப்ரல் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய நாள்களில் எஸ் எம்விடி பெங்களூரு ரெயில் நிலையத் திலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்ப டும் எஸ்எம்விடி பெங்களூரு – திருச் சிராப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06008) அன்றிரவு 10.30 மணிக்கு திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தை
வந்தடைகிறது. இந்த ரெயிலில் 2 ஏசி சேர் கார்பெட்டி கள், 8 சேர் கார் பெட்டிகள், 6 பொதுப்
மாற்றுத்திறனாளி பெட்டிகள், 1 பெட்டி மற்றும் பார்சல் பெட்டி ஆகியவை இணைக்கப்படுகின்றன.இந்த ரெயிலானது கரூர், நாமக்கல், சேலம், பாங்காருபேட்டை, கிருஷ்ணராஜ புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை ஏப்ரல் 2 ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது என்று திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!