பிரபல ‘தென்றல்’ சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ், காலில் ஏற்பட்ட அகில்லஸ் தசைநார் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் குணமடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சிகிச்சைக்குப் பின்னர் ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதன் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும்

ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார். விரைவில் முழுமையாக


குணமடைந்து மீண்டும் இயல்பான பணிகளுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
