கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து, நகராட்சி ஆணையர் வெங்கடாசலபதி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட அலுவலர்களிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.
சோதனையின்போது, நகராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 57 ஆயிரம் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
