Skip to content
Home » ராசிபலன் » Page 17

ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 15.06.2023

மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 15.06.2023

இன்றைய ராசிபலன்… (11.06.2023)…

இன்றைய ராசிப்பலன் –  11.06.2023 மேஷம் இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். ரிஷபம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். மிதுனம் இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். கடகம் இன்று உங்கள் ராசிக்கு காலை 8.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் உண்டாகும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருந்தாலும் மதியத்திற்கு பிறகு நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிம்மம் இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு காலை 8.46 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை. கன்னி இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும். துலாம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். விருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகளால் நெருக்கடிகள் விலகி தேவைகள் பூர்த்தியாகும். தனுசு இன்று பிள்ளைகளிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மகரம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கும்பம் இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணி சுமை குறையும். மீனம் இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும்.

இன்றைய ராசிபலன்…(10.06.2023)…

இன்றைய ராசிபலன் – 10.06.2023 மேஷம் இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். மிதுனம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடகம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சிம்மம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கன்னி இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் எடுத்த காரியம் எளிதில் முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும். துலாம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விருச்சிகம் இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தனுசு இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமை குறைந்து லாபம் அதிகரிக்கும். மகரம் இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் விரயங்களை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கும்பம் இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை கூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.… Read More »இன்றைய ராசிபலன்…(10.06.2023)…

இன்றைய ராசிபலன் -(09.06.2023)

மேஷம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். புத்திரர்களால் பெருமை சேரும். உத்தியோத்தில் புதிய நட்பு மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் பெருகும். மிதுனம் இன்று நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்வது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடகம் இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை. சிம்மம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழில் வியாபாரத்தில் வெளிவட்டார நட்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கன்னி இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். துலாம் இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். எதிர்பாராத வகையில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தனுசு இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவிகள் மூலம் கடன் பிரச்சினை தீரும். தெய்வ வழிபாடு நல்லது. மகரம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். நீங்கள் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் உதவிகள் கிட்டும். கும்பம் இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும். மீனம் இன்று உடல் ஆரோக்கிய ரீதியாக செலவுகள் ஏற்படும். சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும்.

இன்றைய ராசிபலன் –  08.06.2023

மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். ரிஷபம் இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். மனைவி வழி உறவினர்களால் நற்பலன் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். மிதுனம் இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட கால தாமதமாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை. கடகம் இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் பிரச்சினைகள் தீரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். சிம்மம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். கன்னி இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஒரளவு குறையும். எதிலும் நிதானம் தேவை. துலாம் இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. விருச்சிகம் இன்று உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். தனுசு இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு  சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகரம் இன்று உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக செய்யும் செயல்களில் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். கும்பம் இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். மீனம் இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபசெலவுகள் ஏற்படும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.

இன்றைய ராசிபலன் (07.06.2023)…

மேஷம் இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சொந்த தொழில் புரிபவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்பு கிட்டும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதி சோர்வு உண்டாகும்.  குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வராத கடன்கள் வசூலாகும். மிதுனம் இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது. கடகம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் சேரும். சேமிப்பு உயரும். சிம்மம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கன்னி இன்று உடல்நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். துலாம் இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சலும் உடல் நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடன்கள் தீரும். தனுசு இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும், எடுக்கும் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலப்பலன் உண்டாகும். மகரம் இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கும்பம் இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது. மீனம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர  பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

இன்றைய ராசிபலன் -(06.06.2023)….

மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மந்த… Read More »இன்றைய ராசிபலன் -(06.06.2023)….

இன்றைய ராசிபலன் – 04.06.2023

மேஷம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை… Read More »இன்றைய ராசிபலன் – 04.06.2023

இன்றைய ராசிபலன் – (03.06.2023)

மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ரிஷபம்… Read More »இன்றைய ராசிபலன் – (03.06.2023)

இன்றைய ராசிபலன் – (02.06.2023)….

இன்றைய ராசிபலன் –  02.06.2023 மேஷம் இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரிஷபம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். மிதுனம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடகம் இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிம்மம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபகரமான பலன்கள் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும். கன்னி இன்று குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் உண்டா-கும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சி அளிக்கும். துலாம் இன்று எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சேமிப்பு உயரும். விருச்சிகம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கடன்கள் குறையும். தனுசு இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். மகரம் இன்று தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலம் கிட்டும். செலவுகள் குறையும். கும்பம் இன்று ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் – (02.06.2023)….

error: Content is protected !!