Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அவ்வப்போது பணியிடமாற்றம் செய்தும், புதிய பொறுப்புகள் வழங்கியும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கவர்னரின் முதன்மை செயலராக இருந்த கிர்லேஷ் குமார் வீட்டு வசதித்துறையின் முதன்மை செயலாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்னை கலெக்டராக மாலதி ஹெலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் கலெக்டராக மிருனாளினி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், ராமநாதபுரம் கலெக்டராக சிவகுரு பிரபாகரனும், பெரம்பலூர் கலெக்டராக சரண்யா அரியும், திருவள்ளூர் கலெக்டராக கவிதாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!