மேஷ ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் மேஷ ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த வருடம் ஒரு கலவையான பலன்கள் உள்ளடக்கியதாக இருக்கும். இதில் நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் நன்றாகத் திட்டமிட்டால், இந்த ஆண்டை வெற்றிகரமாக கடந்து போக முடியும். மார்ச் நடுப்பகுதி முதல் ஜூன் 2026 வரை விஷயங்கள் சரியாக நடக்காமல் போகலாம், அதன் பிறகு, விஷயங்கள் எளிதாகிவிடும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள், உடல்நல சவால்கள் மற்றும் வெளிநாட்டு யோகங்கள் நிறைந்ததாக இருக்கும். வருடத்தின் ஆரம்பம் கொஞ்சம் கடினமாக இருக்கலாம், எதிர்பாராத செலவுகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், ஆனால், அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் உள்ளது, விரைவில் பூரண குணமாகும். உங்கள் லட்சியங்கள் நிறைவேறும், நிதி நிலை உயரும், நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும். வருமானம் நன்றாக இருக்கும், இருப்பினும் சேமிக்க முடியாத அளவிற்கு செலவுகள் வரும். குடும்ப வாழ்க்கையில் சில ஏற்ற, தாழ்வுகளைக் காணலாம். திருமண காரியம் விரைவில் கைகூடும். ஆன்மிக பயணங்கள் மற்றும் நெடுதூர பயணங்கள் மேற்கொள்ள முடியும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டால் அது நடக்கும். வீட்டில் புது பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வேலை மாற்றம் என்று முடிவு செய்தால் ஒரு முறைக்கு பல முறை யோசித்த பின் முடிவு எடுக்கவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். இந்த வருடம் அதிர்ஷ்டம் இருந்தாலும், முழு பலனை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம் : முருகரை மனதார வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
ரிஷப ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் ரிஷப ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். 2026 ஆம் ஆண்டு ஒரு இனிமையான குறிப்புடன் தொடங்கும். இது உங்களுக்கு மிகவும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்க்கையில் முன்னேற சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நீண்ட கால இலக்குகளை நிர்ணயிக்க இதுவே சரியான நேரம். உங்கள் வெற்றிக்கான பெருமை 2026-ல் சனி பகவானின் அருளால் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும், புது முதலீடுகளில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய லாபத்தைத் தரும். திருமணத் தடைகள் நீங்கி, சுப காரியங்கள் கைகூடும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும், புதிதாக சொத்துக்கள் வாங்கும் எண்ணம் வரும். உங்களைத் தொந்தரவு செய்த சட்ட விஷயங்கள் இறுதியாக ஒரு தீர்வை எட்டும், மேலும் இது அமைதியையும் நிம்மதியையும் தரும். வாழ்க்கைப் பாதையைச் சீரமைக்க நல்ல வாய்ப்புகள் வரும், உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெரும் சந்தர்ப்பங்கள் அமையும். நீங்கள் முழு நம்பிக்கையையும் ஆற்றலையும் மீண்டும் பெற முடியும். குடும்பத்தில் உங்கள் உயரும். வெளிநாடுகளுக்கு இடம்பெயரவும் இது ஒரு நல்ல நேரம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளைக் எதிர்பார்க்கலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். இந்த ஆண்டு முழுவதுமே ரிஷப ராசிக்கு வளர்ச்சி வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம் : ஆஞ்சநேயரை மனதார வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
மிதுன ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் மிதுன ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூற முடியாது, ஏனெனில் நீங்கள் சராசரி பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. வருட தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆண்டின் முதல் பாதி சற்று மெதுவாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டும் சிறிது பாதிக்கப்படலாம். மனதில் எழும் புது புது எண்ணங்களால் முன்னேற்றம் உண்டு. நீங்கள் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் நீண்ட கால வெற்றியைப் பெறலாம். இந்த ஆண்டு ஜூன் 1 குரு பெயர்ச்சி க்குப் பிறகு சாதகமான கள் உண்டு. தீராத பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தங்க நகைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆண்டு முழுவதும் கிரஹ நிலைகள் மற்றும் பெயர்ச்சிகளின் அடிப்படையில் பலன்கள் மாறுபடும், குடும்பத்தில் நிம்மதி கிட்டும். எதிலும் உங்கள் ஓங்கியே நிற்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதைத் தவிர்த்து, ஒரு வேலையில் கவனம் செலுத்தவும். கடின உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும், உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். இந்த ஆண்டு முழுவதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம் : பெருமாளுக்கு துளசி சாற்றி வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
கடக ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் கடக ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த வருடத்தின் தொடக்கம் சிறப்பாகவும், அதிர்ஷ்டங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். உங்கள் குடும்பத்தினருடனும், உறவுகளுடனும் நல்ல நேரத்தை செலவழிக்க முடியும். வருமானம் நன்றாக இருக்கும், ஆனால் சேமிப்பதில் இன்னும் சிரமத்தை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழக்கூடும். குடும்ப நிதி நிலைமை சீரடையும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். இது உங்களுக்கு நம்பிக்கையையும் மன அமைதியையும் தரும். மே 2026-ல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். புது வாய்ப்புகள் உங்களை தேடி வரலாம். ஜூலை 2026 இன் பிற்பகுதியிலிருந்து, நீங்கள் கடுமையான சோதனைக் கட்டத்தில் நுழைய வேண்டிவரும். எதிர்பாராத பயணம், மருத்துவச் செலவுகள் மற்றும் வீட்டு பராமரிப்புச் செலவுகளுக்கு நீங்கள் நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். இந்த ஆண்டு உங்களை மாற்றும், சவால்கள் மற்றும் வளர்ச்சி இரண்டையும் கொண்டு வரும். உடல் நலத்தை பாதுகாக்க சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்வது எல்லா வகையிலும் நல்லது. வெளிநாட்டு தொடர்பான வாய்ப்புகள் காத்திருக்கிறது. வேலையில் நல்ல பெயர், சம்பள உயர்வு அல்லது போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் மேன்மையடையம், பல துறைகளில் வெற்றி, முன்னேற்றம் காணக்கூடிய ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் உங்களுக்கு நல்லதும், கெட்டதும் இரண்டும் கலந்த ஆண்டாக இருக்கும்.
பரிகாரம் : வராகியை மனதார வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
சிம்ம ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் சிம்ம ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த ஆண்டு சற்று குழப்பமானதாக தான் இருக்கும், ஆனால் ஆக்கபூர்வமானதாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் தெளிவான முன்னேற்றங்கள் உண்டு. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிவாரணமும் நிலையான வளர்ச்சியும் கிடைக்கும். நிதி சிக்கல்கள் குறையும், கடன்களை அடைக்க முடியும். புது முதலீடுகளை செய்ய இது ஒரு நல்ல நேரம். முக்கியமான சந்தர்ப்பங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். இந்த நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு நம்பிக்கையையும் மன அமைதியையும் தரும். குடும்ப வாழ்க்கைக்கு இந்த ஆண்டு மிகவும் நல்லதாகவோ அல்லது மிகவும் மோசமாகவோ இல்லை என்று கூறலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டு உங்கள் உடல்நலம் பலவீனமாக இருக்கும். சாதகமானபலன்கள் பல உண்டு. குறிப்பாக நிதி, தொழில் மற்றும் கடனில் இருந்து விடுதலை போன்ற விஷயங்களில் முன்னேற்றம் காணலாம். புதிய வருமான வழிகள் பிறக்கும், பண வரவு இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். மனம் அமைதி பெரும். நீங்கள் வேலையை இழந்திருந்தால், விரைவில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் சீரான முறையில் இருக்கும். இந்த ஆண்டு முழுவதும் அதிவேக முடிவுகளைத் தவிர்த்து உங்கள் காரியங்களில் நிதானமாகச் செயல்படவும்.
பரிகாரம் : சூரிய பகவானை மனதார வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
கன்னி ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் கன்னி ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த ஆண்டு சில சந்தர்ப்பங்களில் நல்ல பலன்களையும் மற்றும் சிலவற்றில் பலவீனமான பலன்களையும் தரக்கூடும். உங்களுக்கு நிவாரணமும் நிலையான வளர்ச்சியும் கிடைக்கும். நிதி சிக்கல்கள் குறையும், கடன்கள் அடைப்படும். பணத்தை முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம். முக்கியமான சந்தர்ப்பங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். இந்த நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு நம்பிக்கையையும் மன அமைதியையும் தரும். உடல் நலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியமும் சிறிது ஏற்ற இறக்கமாக இருக்கலாம், ஆனால் விரைவில் குணமாகும். ஜூன் மாதத்திற்குப் பிறகு யோகமான காலம், தொட்டது துலங்கும், வேலை மற்றும் திருமணத்தில் முன்னேற்றம், பணப்பை நிரம்பும், மனதில் பயம் நீங்கி கம்பீரம் பிறக்கும். ஜூன் மாதத்திற்குப் பிறகு அற்புதமான பலன்கள் கிடைக்கும், வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் வரும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள், குறிப்பாக இரண்டாம் பாதியில் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் உங்கள் விருப்பப்படி வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில், வியாபாரம் புது உச்சத்தை தொடும். இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக ஆண்டாக அமையும் என்பது தான் உண்மை.
பரிகாரம் : மகாவிஷ்ணுவை வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
துலாம் ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் துலாம் ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். கடந்த ஆண்டு முதல் இருந்த நீண்டகால துன்பங்கள் மற்றும் பதட்டங்கள் இறுதியாக முடிவுக்கு வரும். பழைய தவறுகளை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சூழ்நிலையையும் மிகச் சிறப்பாக எவ்வாறு கையாள்வது என்பது புரிய வரும். வெளிநாட்டில் குடியேற விரும்பினால், உங்கள் திட்டத்தை செயல்படுத்த இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். உங்கள் அறிவு புதிய வாய்ப்புகளைத் தரும், மேலும் புத்திசாலித்தனமான முடிவுகள் சாதகமான பலன்களைத் தரும். குடும்ப வாழ்க்கையும் சமநிலையில் இருக்கும். நீங்கள் சரியான உணவு முறையை பின்பற்றினால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 2026 ஆம் ஆண்டு முழுவதும் சனி உங்களை தொடர்ந்து பாதுகாப்பார். முக்கிய கிரகப் பெயர்ச்சிகளால் இந்த வருடம் உங்கள் ராசிக்கு பல நல்ல மாற்றங்கள் வரக்கூடும், நம்பிக்கை அளிக்கும், பல நல்ல தொடக்கங்களைக் கொண்டுவரும் ஆண்டாக அமையும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் தாமதமின்றி வந்து சேரும், நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்படும். உத்யோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆதாயங்கள் கிடைக்கும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
விருச்சிக ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் விருச்சிக ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். 2026 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சி வாய்ப்புகளையும் லாபங்களையும் உறுதியாக எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிறைந்திருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். புதிய தொடக்கங்கள், மன அமைதி, தைரியத்தால் முன்னேற்றம், உழைப்புக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும், விருப்பங்கள் பூர்த்தியாகும், வாழ்க்கையில் பல திருப்பங்கள் இருக்கும். இது புதிய நம்பிக்கை, வளர்ச்சி நிறைந்த ஆண்டாக அமையும். உங்கள் 5 ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும். உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளிலிருந்து சிறந்த நிவாரணமம் கிடைக்கும். குடும்ப சூழலிலும் நீங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் உணர முடியும். ஆனால் இந்த ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்படும். அந்த நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புதிய தொடக்கத்தையும், மன அமைதியையும், நம்பிக்கையையும் கொண்டு வரும். உங்கள் ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற தக்க சன்மானம் கிடைக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். இந்த ஆண்டு பல புதிய திட்டங்கள் மூலம் நல்ல லாபத்தையும், மதிப்பையும் பெற முடியும்.
பரிகாரம் : சிவபெருமானை வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
மகரம் ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் மகர ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். 2026 ஆம் ஆண்டு பொதுவாக பார்க்கும் போது நன்றாகவே இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். தெய்வ அனுக்கிரகமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. உங்கள் வருமான ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் சேமிப்பதில் இன்னும் சிரமம் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் தவறான புரிதல்களைத் தவிர்த்தால் நீங்கள் பிரச்சினைகளிலிருந்து விலகி இருக்க முடியும். மார்ச் 26-க்குப் பிறகு நிறைய மாற்றங்கள், தடையில்லா சுப காரியங்கள், புதிய முயற்சிகளில் வெற்றி, செல்வ வளர்ச்சி, பண வரவு ஆகியவை அதிகரிக்கும், ஆரோக்கிய மேம்பாடு, நீங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தவில்லை என்றால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் கவலையை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுகிறது. பெரிய மனிதர்களின் நட்பும் அவர்களால் பல உதவிகளும் கிடைக்கும். 2026 ஆம் ஆண்டில் சனி உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். குடும்பத்தில் சாதகமான சூழல் உருவாகும். உடல் நலப் பிரச்சனைகள் குறையும். மகிழ்ச்சி, சுபிட்சம், சுப நிகழ்ச்சிகள். புது வீடு, மனை வாங்க முடியும். உங்கள் குடும்பம் சமூகத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெறும். ஆண்டின் பெரும்பகுதி உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று சொல்லலாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் அமையும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : சாஸ்தாவை வணங்கி வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
கும்பம் ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் கும்ப ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். 2026 ஆம் ஆண்டு சற்று பலவீனமாக இருக்கலாம், மேலும் கலவையான களை மட்டும் தான் எதிர்பார்க்க முடியும். சென்ற ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கும். குடும்பப் பிரச்சினைகள் தீரத் தொடங்கும். கடன்கள் தீரும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் சேமிப்பதில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கை சமநிலையில் இருக்கும். முக்கிய கிரகங்களின் நகர்வுகள் கும்ப ராசிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். பல யோகங்கள் இருந்தாலும், சில ஆபத்துகளும் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்திற்கு நல்ல காலம். குறுக்குவழிகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க எந்த வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். பண வரவுக்கான யோகங்கள் உண்டு. இருப்பினும், போட்டி மற்றும் சவால்களைச் சமாளிக்க வேண்டி வரலாம். பணியிடத்தில் தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும். இந்த ஆண்டு நீங்கள் ஒரு பெரிய மாற்றத்தையம், வளர்ச்சியையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
மீனம் ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் மீன ராசி வாசகர்களே, இவ்வாண்டு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். கடந்த ஆண்டு பல சவால்களை கடந்து வர வேண்டியிருக்கும் ஆண்டு தொடக்கத்தில் சில கசப்பான செலவுgalகளைக் கொண்டுவரும். குடும்ப சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பண விவகாரத்தில் ஏமாற வேண்டிவரும். உங்கள் ராசிக்கு ஜென்ம சனியின் தாக்கம் தொடர்ந்து இருக்கும், எனவே கடின உழைப்பு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மேன்மை நிலை உண்டாகும். பண விஷயங்களில் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் காணலாம். ஜென்ம சனியின் தாக்கம் இருப்பதால், உடல் உழைப்பு, ஆரோக்கியம், போன்ற எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்கவும். நிதி நிலையிலும், உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் எதிர்பாராத திடீர் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. எந்தவொரு அசம்பாவிதங்களையும் தவிர்க்க உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், நேர்மையாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பதும் அவசியம். வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் நிலவி வந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி இருக்கும். இந்த ஆண்டு ஒரு புதிய அணுகுமுறையை கையாளுவதன் மூலம் நீண்டகாலமாக முடியாமல் இருந்த காரியங்களை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
