பிரிட்டன் அரசில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் நாடாளுமன்ற இணை அமைச்சராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் வம்சாவளி பெண் என்ற பெருமையை உமா குமரன் பெற்றுள்ளார். அவரது நியமனம், பிரிட்டன் அரசியலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் உயர்த்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
