Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுசேரியில் ஒரு சில இடங்களிலும் மழை  பெய்யக்கூடும் என்றும்  வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தொடர்ந்து 7  நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது  அடுத்த 3 மணி நேரத்திற்கு  அதாவது காலை 10 மணி வரை தமிழகத்தில் 11  மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை தெரிவித்திருக்கிறது.  அதன்படி,  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த ஆகிய மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!