Skip to content
Home » தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

வெப்ப சலனம் காரணமாக, 24.05.2023 முதல் 26.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.27.05.2023 மற்றும் 28.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மடத்துக்குளம் (திருப்பூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), நம்பியூர் (ஈரோடு) தலா 3, ஓசூர் (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்). திருமூர்த்தி அணை (திருப்பூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), சின்னகல்லாறு (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), உதகை (நீலகிரி) தலா 2, சோத்துப்பாறை (தேனி), தாளவாடி (ஈரோடு), பெரியகுளம் AWS (தேனி), பெரியார் (தேனி), பெரியகுளம் (தேனி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி). மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்) தலா 1.

26.05.2023 முதல் 28.05.2023 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் இலட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27.05.2023 மற்றும் 28.05.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!