தமிழக பட்ஜெட் ஆக.,13-ம் தேதி தாக்கல்….

59
Spread the love

முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்ஜெட் தாக்கல் குறித்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை அலுவலர்களுடன் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை வெளியிடுவது குறித்தும், தமிழக பட்ஜெட் எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்தும் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்  செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வென்று புதிய ஆட்சி அமைந்ததை அடுத்து முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட் உடன் விவசாய பட்ஜெட்டும் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது.முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பட்ஜெட் தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி நிதிநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

LEAVE A REPLY