30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை…. முதல்வர் தகவல்

206
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நிரூபர்களிடம் அவர் கூறியதாவது;- “ இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிக்கிறது.  தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் 2,10 538 பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 3,371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. 
 
30 நிமிடங்களில் பரிசோதனை  செய்யும் வகையில் 1 லட்சம்  ரேபிட் பரிசோதனை கருவிகள் வாங்கப்பட உள்ளன.  ரேபிட்  கருவிகள் வந்தவுடன் கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை  செய்யப்படும். தமிழகத்தில் மொத்தம் 38 மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 
அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்கட்டமாக  ரூ.500  கோடி மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். பெரும்பாலான இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை.
 
அரசு சட்டம் போட்டாலும் அதை சரியாக கடைப்பிடிப்பது மக்கள் கையிலே உள்ளது. நோய் அறிகுறி தெரிந்தவுடன் உரிய மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.  மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.  வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கு உதவ அந்தந்த மாநில முதல்வர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY