சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 184 கடைகளை மூடி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். காலி மது பாட்டில்
திரும்பப்பெறும் திட்டத்தை எதிர்த்து, டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைகள் திறக்கப்படாத காரணத்தினால் மது அருந்துவோர் மது கிடைக்காமல் கடையை சூழ்ந்தனர். டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர்.
