திருச்சி முடுக்குப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட்டு கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசுடன் மோதல் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிவிஎஸ் டோல்கேட் முடுக்குப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட்டு கடையை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடையால் சாலை விபத்துக்கள் அதிகரிப்பதாகவும், போதை அடிமைகளின் எண்ணிக்கை

அதிகரிப்பதாகவும், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி, மார்க்சிஸ்ட்

கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசா இருக்கும் இடையே மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
