Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது…குடிமகன்கள் ஷாக்

டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தம், ஒய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு சிஐடியு, ஏஐடிசி உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரை அழைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் நாளை 17ம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளன.

இந்நிலையில் இன்று இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூடி சாவியை நிர்வாகத்திடம் கொடுத்து விடுவதாகவும் 17ம் தேதியில் இருந்து பணிக்கு செல்ல மாட்டோம் என்று டாஸ்மாக் ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!