Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் த.வெ.க.வினர் வாக்கு சேகரிப்பு: தேர்தல் விதிமீறல் எனப் பக்தர்கள் அதிருப்தி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பரப்புரைகளும், தேர்தல் கட்சி கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது பொள்ளாச்சி பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில் பல பக்தர்கள் கூடும் இடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், அவர்கள் கட்சி துண்டு அணிந்து மற்றும் பொள்ளாச்சி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஜி. ராமநாதன் புகைப்படத்தை காட்டி ஓட்டு சேகரித்தனர்.
பக்தர்கள் குழுமியிருக்கும் கோயில் வளாகத்திற்குள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதி இன்றி தமிழக வெற்றி கழகத்தினர் ஓட்டு சேகரித்தல் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!