Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தொழிலாளியை தாக்கி நகை- பணம் பறித்த வாலிபர் கைது….

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45) இவர் தையக்கார தெருவில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பழக் கடைக்கு வந்த வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 31)என்பவர் சந்திரசேகரை மிரட்டி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் ஆயிரம் பணம், செல் போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.இந்த சம்பவம் குறித்து சந்திரசேகர் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திவாகரனை கைது செய்து அவரிடமிருந்து நகை, பணம் செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!