Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாத்ரூமில் ரகசிய வீடியோ எடுத்த வாலிபர் கைது

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயது பெண். இவர் தனியார் நர்சிங் ஹோமில் வேலை செய்துவருகிறார். இவருடன் பணியாற்றிவரும் செவிலியர்கள் 11 பேர், எஸ்ஆர்பி காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். கடந்த 12ம் தேதி 46 வயது பெண், செவிலியர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஒருவர் வந்து, ‘’அடிக்கடி உங்களது வீட்டு பாத்ரூம் அருகே செல்போனில் ஒருவர் வீடியோ எடுப்பதுபோல் தெரிகிறது’’ என்று தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

அத்துடன் உடனடியாக ரகசியமாக பார்த்தபோது பாத்ரூம் ஜன்னல் பக்கமாக நின்று ஒருவர் வீடியோ எடுப்பது தெரியவந்தது. இதுசம்பந்தமாக பெண் கொடுத்த புகாரின்படி, பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை கிராமம் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சத்யராஜை (37) கைது செய்தனர். இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சத்யராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!