Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பறக்கும் ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கபாலி. இவருடைய மகன் சங்கர் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 27-ம் தேதி சங்கர், சென்னை லைட் ஹவுஸ் ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்ற பறக்கும் ரயில் மோதி படுகாயம் அடைந்தார்.

திருவான்மியூர் ரயில்வே போலீசார் சங்கரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!