Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதானியிடம் ரூ 100 கோடி நன்கொடை.. தெலுங்கானா முதல்வருக்கு சிக்கல்..

தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், பிரபல தொழிலதிபர் அதானியை பா.ஜ., உடனும், பிரதமர் மோடியுடனும் தொடர்புபடுத்தி தேர்தல் பிரசாரத்தின் போதும், பொதுக்கூட்டங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் விமர்சித்து வருகிறார். இதனை காங்கிரஸ் தலைவர்கள் எதிரொலித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அதானி, தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது, மாநிலத்தில் இளைஞர்களுக்கு தொழில்துறை திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்காக அமைக்கப்படும் பல்கலைக்கு ரூ.100 கோடி நன்கொடைக்கான காசோலையையும் முதல்வரிடம்  அதானி வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் நேற்று வெளியானது. இது தொடர்பாக பா.ஜ.,வின் ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாளவியா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:தினமும் அதானி அதானி என ராகுல் பேசி வருகிறார். இதனையும் மீறி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அதானியிடம் இருந்து நன்கொடையை பெற்றுக் கொண்டார். உங்கள் சொந்த முதல்வரே அவரை மதிக்கவில்லை. அவரை யாரும் ‘சீரியசாக’ எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு அந்த பதிவில் அமித் மாளவியா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!