தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனாலும், அவர் கைது செய்யப்படாததால், சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் ரகசியஉடன்பாடு இருப்பதாக காங்கிரஸார் குற்றம்சாட்டி வந்தனர்.
இதற்கிடையே, கவிதா வீடு முன்பு பிஆர்எஸ் கட்சியினர் பெருமளவில் குவிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
கவிதாவை அமலாக்கத் துறையினர் நேற்று இரவு 8.40 மணிவிமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்றனர். அங்கு உள்ள அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் அவரை இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.

