தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் ”உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழா நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு, விண்ணப்பப் படிவம், அடையாள அட்டை, தொப்பி மற்றும் கனவு அட்டைகளை வழங்கி சிறப்பான முறையில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் மேயர் மு.அன்பழகன் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந..தியாகராஜன்,எம்.பழனியாண்டி, மண்டலத்தலைவர்.மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கங்காதாரிணி, மாமன்ற உறுப்பினார்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

