கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தெலுங்குபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்கள் கோவிலுக்குத் தீ வைத்ததாகக் கூறப்படும் நிலையில், கோவிலின் மேற்கூரைகள் மளமளவென எரியத் தொடங்கின.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக குளித்தலை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலுக்குத் தீ வைத்தது யார்? இதன் பின்னணியில் என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் கோவிலில் ஏற்பட்ட இந்தத் தீ வைப்பு சம்பவம், தெலுங்குபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
