Skip to content

கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

கரூர் அருகே நேற்று வாங்கல் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கூறப்படும் ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து ஜேசிபி இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இல்லத்தை நோக்கி மாட்டுவண்டி தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் நிலவியது.

கரூர்-கோவை சாலையில் மாட்டு வண்டிகளை சாலையிலேயே நிறுத்தி, மாடுகளை அவிழ்த்து வண்டிகளுக்கு கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுப்பு நிறுத்தி பேச்சு வார்த்தை ஈடுபட்டனர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து அதன் பேரில் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!