Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே மாட்டை பிடிக்க சாலையை கடந்த விவசாயி லாரியில் அடிபட்டு பலி

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (63) விவசாயி. இவர் தான் வளர்த்து வரும் மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார். அப்போது சாலையில் சென்ற வாகனங்கள் எழுப்பிய ஹாரன் ஒலியால் மாடு திடீரென மிரண்டு ஓட தொடங்கியது.

இதனால் சாலையில் ஓடிய மாட்டை பிடிக்க அண்ணாதுரையும் பின் தொடர்ந்து ஓடி உள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ய போது  எதிரே வந்த லாரி அண்ணாதுரை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து அந்த இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!