Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்…

தஞ்சை ரயிலடி அருகே மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் உமா, வீராச்சாமி, சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் ஆறுமுகம், ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் மதிவாணன், மாநில செயலாளர் முருகையன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. வின் அளித்த தேர்தல் வாக்குறுதியான காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். முறையான ஓய்வூதியம் வழங்க ணே்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் மனோகரன் மற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!