Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் ஆட்டோ டிரைவர்களுக்கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம்….

தஞ்சை தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…

தஞ்சை மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் படி பதிவு குறைவாக உள்ள ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுனர்களின் நலவாரிய பதிவை அதிகரிக்க நலவாரிய பதிவு சிறப்பு முகாம்கள் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக வருகிற 22ம் தேதி (சனிக்கிழமை) பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆட்டோ டிரைவர்கள் மற்றும் இதர வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆதார் எண் இணைக்கப்பட்ட கைபேசி, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அசல் ஆவணங்களுடன் டிரைவர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர் நலவாரியத்தில் பதிவு செய்யலாம் என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!